Wednesday, December 28, 2011

அன்னா ஹஸாரேயும் உண்ணாவிரதமும்


முதலில் மக்களுக்கு உதவுவதாக நாடகமாடும் இவர்கள் யார்..? இவற்றைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். இவ்வளவு நாட்கள் மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர்கள் இன்று இவர்கள் கேட்ட பல அம்சங்கள் அடங்கிய மசோதாவை தாக்கள் செய்யும்போது ஏன் காட்டுக்கூச்சல் போட்டு பாராளுமன்றத்தை தடுக்கவேண்டும். மக்களுக்காக உழைப்பதாக சொல்லும் இவர்கள் மக்க்ளின் வேர்வை சிந்தி கட்டும் வரிப்பணத்தில் நடக்கும் நாடாளுமன்றத்தை முடக்கவேண்டிய காரணம்தான் என்ன ? இதுவரை நடந்த உண்ணாவிரத நாடகத்தின் உச்சம்தான் இந்த லோக்சபா முடக்கம்.

முதலில் நம்ம நைனா ஹசாரே பற்றி...
ஊரில் உள்ளவர்களையும் மற்றவர்களையும் நேர்மையாக நடக்க வேண்டும் என்று சொல்லும் இவர் வந்த வரலாறு. மக்களுக்கு போராடுவதாக நாடகம் ஆடும் இவர் இவ்வளவு நாள் எங்கிருந்தார்..? திடீரென இவர் நடத்தும் உண்ணாவிரதத்திற்க்கு எப்படி இவ்வளவு பணம். கொடுப்பவர்கள் யார் இவர்களின் நோக்கம்தான் என்ன.

உங்களுக்கு தெரியும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்படிப்பட்டது என்று. இவர்கள் நடத்தும் பயிற்சி எப்படி இருக்கும்.? சிறுபான்மையினரை எப்படி அழிப்பது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் நாமும் நம் ஈனங்கெட்ட மதமும் எப்படி வசதியாக வாழ்வது. இதுதான் இவர்களின் நோக்கம். இவர்களுக்கு அம்மா, தங்கை, அக்கா போன்ற உறவுமுரை உறவுகள் பற்றி வித்தியாசம் தெரியாதவர். இவர்கள் இருக்கும்வரை இந்திய கலாச்சாரத்தில் சகோதரத்துவம் வளரவே வளராது. உணர்வற்ற ஐந்தறிவு உள்ள மிருகங்கள் இருக்கும் இயக்கம்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். 

இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உறுப்பினர்தான் இந்த தாதா ஹஸாரே. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் என்பவரின் செயலராக பணியாற்றி உள்ளார் அன்னா ஹஸாரே. 1983-ல் உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூன்று நாள் பயிற்சி பாசறையில் பங்கு கொண்டுள்ளார்.

நாட்டுக்காக உழைப்பதாக சொல்லும் இந்த ஹசாரே, நம் நாட்டு போரை எப்படி எதிர்கொண்டார் தெரியுமா.? நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில்  பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் அன்னா ஹஸாரே. 1965 ல் இந்தியா, பாகிஸ்தான்  யுத்தம் நடக்கும் போது அதில் பங்கெடுக்காமல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டார். இவர் ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர் என்று நடுநிலையாளர்கள் பல பேர் சுட்டிகாட்டினாலும் அந்த உண்மை செய்தியானது மக்களுக்கு இதுவரை முறையாக சேரவில்லை என்பதுதான் நம் கவலை

ராம் பாபா என்னும் கொடியவன்
ஊழலுக்கும், கறுப்பு பணத்திற்கும் எதிரான பொது மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் சாதகமாக பயன்படுத்த ஆன்மீகத்தின் பெயரால் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள ஆர்.எஸ்.எஸின் யோகா குரு பாபா ராம்தேவும் ஹசாரேயுடன் மாடல் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்.ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தீவிர ஆதரவுடன் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது.

இவர்கள் மக்களை பல வகையிலும் ஹிந்துத்துவத்தை பயன்படுத்தி முட்டாளாக்கி சம்பாரித்த பணம் இன்னும் பல நாடுகளிலும் கருப்புப்பணமாக இருக்கிறது. பல குட்டித்தீவுகளை சொந்தமாக இருக்கிறது. இன்னும் கூடியவிரைவில் செய்தியாக வரும்.

இவர்தான் என்று இல்லாமல் மக்களுக்கு உண்மையை உணர்த்தக்கூடிய பத்திரிக்கைத்துறையில் பல பார்ப்பணர்கள்தான் இருக்கின்றனர். அவைகளில் இந்த செய்திகளை பார்பன தினமணி, தினமலர் போன்றவை இருட்டடிப்பு செய்கின்றன.  "தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்" என்பதை மறைக்க ஆயிரம் பொய் சொல்கிறார் அன்னா ஹஸாரே. இவர் மட்டுமல்லாமல் இவர் கூட இருக்கும் கூட்டங்களான எல்லோரும் ஒருவகையில் மக்களை அழிக்கும் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள்தான்.

கிரன் பேடி என்னும் நாடகக்காரி
இவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் இவற்றையும் நீங்கள் படிக்க வேண்டும் கிரன் பேடி, பிரபலமான ஐ.பி.எஸ். போலிஸ் அதிகாரி. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, நேர்மையான(?) போக்குள்ளவர். தில்லியில் போக்குவரத்து அதிகாரியாக இருந்தபோது இந்திரா காந்தியின் காரையே 'நோ பார்க்கிங்' இடத்தில் நிறுத்தியதற்காக இடம் பெயர்த்தவர். (அப்பப்பா தாங்கமுடியலைங்க)

என்ன நேர்மையான அதிகாரி ! இவர் செய்த காரியம்தான் என்ன.? தன்னுடைய பதவியை டிசம்பர் 2007ம் ஆண்டு விருப்ப ஓய்வு எடுத்துகொண்டு மக்களுக்கு உழைக்க வந்தாராம். 2007ம் ஆண்டு ஆரம்பித்துள்ளார் தன்னுடைய பிரச்சாரத்தை..எப்படி மக்களின் பணத்தின்மூலம் விமானசெலவு, உணவு, மற்றும் தன் குடும்பசெலவு ஆகியவற்றை ஒவ்வொறு பயணத்தின்போதும் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களிடம் வசூல் செய்வது. இவருக்கு அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் 75 சதவீத சலுகை வழங்கப்படும். இவரது கேலன்டரி விருது எண் 433. இந்த சலுகையை முழுதாக அனுபவிக்கும் கிரண்பேடி, பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தை முழுவதுமாகப் பெற்று வந்துள்ளார் பல ஆண்டுகளாக. 
 
அவர் பயணம் செய்த எகானமி விமான டிக்கெட்டுகள், என்ஜிஓக்களிடம் பிஸினஸ் கிளாஸுக்காக பணம் வசூலித்ததற்கான ரசீதுகள் என 12-க்கும் மேற்பட்ட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி, இதுபோல பயணம் செய்து அதிகப்படியாக கட்டணத்தை வசூலித்துள்ளார் கிரண் பேடி.

இரண்டாவதாக அறக்கட்டளை
பத்திரிக்கைமூலமும், ஹிந்து சங்கங்கள் மூலமும் வரும் பணத்தை தன் பெயரில் ஆரம்பித்துள்ள அரக்கட்டளையில் போட்டு..(அட நல்ல அறக்கட்டளைன்னு வேற தினமலர் சொல்றாங்க) மக்களை ஏமாற்றி ஏப்பம் விடுவது இதை எந்த மதமான ஹிந்துத்துவத்தை பயன்படுத்தினாரோ, அதே பெயரான தி ஹிந்து பத்திரிக்கை பக்காவாக ஆதாரத்துடன் வெளியிட்டு இவர் வண்டவாளத்தை பிட்டுபிட்டு வைத்தது. இவர்தான் மக்களுக்காக உழைக்கும் உண்மையாளராம். (நம்பினால் நம்புங்கள்) மக்களுக்காக பதவியையே ராஜிநாமா செய்தவர். எப்படி எமாற்றுவார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. பதவியில் இருந்து இவ்வளவு சம்பாரிக்க முடியாதுங்க.  நம் நாட்டில் படித்த சகோதரரகள் சம்பாரிப்பதைவிட பிச்சைக்காரர்கள், சாமியார்களின் சம்பளம் எவ்வளவு அதிகம் என்று உங்களுக்கு தெரியும்.

அர்விந்த் கேஜ்ரிவால் அன்ட் கோ
இவர்களும் மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று கவர்மென்ட் வேலையை உதரிவிட்டு வந்துவிட்டாராம். அன்னா ஹசாரேவின் 'ஊழலுக்கு எதிரான இந்தியா' எனும் அமைப்பில், சட்ட ஆர்வலராக அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிராராம் !!! ? அன்னா ஹஸாரே போராட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட நன்கொடை பணத்தில் ரூ. 80 லட்சத்தை அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் தனது அறக்கட்டைளையில் டெபாசிட் செய்ததாக ஹிந்துத்துவ சாமியார்  அக்னிவேஷ் குற்றம் சாட்டியுள்ளார். என்பவறே குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் இருக்கிறது
இவர்களுக்கெல்லாம் ஒரே நோக்கம் பதவி வெறி, பணம், ஆளும் கொள்கை. இது பத்தாது என்று பி.ஜே.பி.யில் இருக்கும் பல மானங்கெட்ட தலைகள். காரணம் இவர்கள் பதவி இழந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. இனிமேலும் பதவிக்கு வராவிட்டால் நம் கட்சியை மக்கள் மறந்துவிடுவார்கள் எனவே இந்த ஹசாரே அன் கோவை வைத்து காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் இதற்காக பணத்தை வாரி இறைக்கிரார்கள். இல்லையென்றால் ஹசாரே என்ன இந்திய சுல்தானா ? இல்லை பேடிதான் என்ன ராஜஸ்தான் இளவரசியா. ? லட்சக்கணக்கான மக்களுக்கை திரட்டி இவ்வளவு செலவு செய்ய ஏது பணம். கேட்டால் ஈசியாக சொல்கிறார்கள் மக்களிடம் வசூலித்தோம் என்று. இன்று இருக்கும் விலைவாசிக்கு இன்று பொழுதை கடன் இல்லாமல் கழித்தோமா என்று மக்கள் நினைக்கும் நிலை. இதில் இவர்களுக்கு கொடுக்க ஏது பணம் ?

ஹசறேயும் 

இந்த மக்கள் ஆட்சி வீழ்வதற்கு இவரின் கொள்ளை பங்காளிகள்தான் இந்தியாவின் அத்வானி, ஆர்.எஸ்.எஸ், மற்றும் ஹிந்துத்துவாக்கள் என இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தப் பட்டியலில் பல்வேறு தொழில் அதிபர்கள், தொழில் போட்டிகள் மற்றும் இந்தியாவை வெளிநாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் முனைப்பின் விளைவுதான் இந்த நாடகம். 

அன்னா ஹஸாரேவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். இயக்கதான் என்ற திக்விஜய்சிங் மற்றும் பல நடுநிலையாளர்கள் கூரிய குற்றச்சாட்டை இவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதுதான் என்ன? இப்படிபட்ட ஒரு பொய்யரை நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.அன்னா ஹஸாரே தனது வேஷத்தை கலைத்து வெளியே வருவாரா! தன்னை யாரென்று அறிவிப்பாரா!

நன்றி : சீர்காளியாரே

Tuesday, December 27, 2011

2 பேருடன் கள்ளத்தொடர்பு- ஈரான் பெண்ணின் தண்டனை மாற்றம்: கல்லால் அடிப்பதற்கு பதில் தூக்கில் போட முடிவு

ஈரான், டிச. 27-
கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணிற்கு கல்லால் அடிப்பதற்கு பதிலாக தூக்கில் போட்டு தண்டனை நிறைவேற்ற முடிவாகி உள்ளது.   ஈரான் நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்தியானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், 2 ஆண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.
 
 இதை அறிந்து கண்டித்த அவரது கணவரை,கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து 2005-ம் ஆண்டு கொலை செய்தார். இவரும், கள்ளக் காதலர்களும் கைது செய்யப்பட்டனர். அஜர் பைஜான் சிறையில் அஷ்தியானி அடைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள சட்டப்படி கள்ளத் தொடர்பில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்துக் கொன்று தண்டனை நிறைவேற்றப்படும். மற்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.
 
இதன்படி இவருக்கு 2006-ல் கல்லால் அடித்து கொல்லும் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஒரு வரை கல்லால் அடித்துக் கொல்வது காட்டுமிராண்டி தனம் என்று கண்டித்தன. இதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. 
 
எனினும் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளித்தே ஆக வேண்டும் என்பதால், கல்லால் அடித்துக் கொல்லும் தண்டணைக்கு பதிலாக, தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப, ஏற்கனவே அளிக்கப்பட்ட உத்தரவிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. “கடும் குற்றத்தில் ஈடுபட்டவர், தண்டனையில் இருந்து எந்த வகையிலும் விலக்கு பெற முடியாது. எப்படியும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
 
கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட அஷ்தி யானியின் மரண தண்டனை எந்த வகையிலாவது நிறை வேற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அந்த வகையில், தூக்கில் போடுவதிலும் ஆட்சேபனை எழுப்ப போவதில்லை” என்று உள்ளூர் நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறினார். 
 
THANKS : MAALAIMALAR

Friday, December 23, 2011

ஹசாராவை விளாசிய மும்பை உயர் நீதிமன்றம்!

மும்பை: லோக்பால் மசோதா குறித்து வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்யலாமே, மைதானம் எதற்கு என்று மும்பை உயர் நீதிமன்றம் அன்னா ஹசாரேவை கேட்டுள்ளது.

வலுவான லோக்பால் மசோதா வேண்டி அன்னா ஹசாரே வரும் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறார். அதற்காக மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தை தேர்வு செய்தனர். ஆனால் அந்த மைதானத்தின் ஒரு நாள் வாடகை ரூ.3.77 லட்சம் என்பதால் அன்னா குழு சற்று தயங்கியது. இதையடு்தது மைதானத்தை இலவசமாக அல்லது குறைந்த விலையில் தங்களுக்கு தருமாறு அன்னா குழு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையே ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கலாமே என்று மகாராஷ்டிரா அரசு அன்னாவுக்கு அறிவுரை வழங்கியது. ஆனால் அந்த மைதானம் சிறியதாக உள்ளது என்று அன்னா குழு தெரிவித்தது. ஆசாத் மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடத்தையும் சேர்த்துக் கொடுத்தால் அங்கு போராட்டம் நடத்தத் தயார் என்று அந்தக் குழு கூறியது.

இந்நிலையில் அன்னா குழுவின் மனு நீதிபதிகள் மஜ்முதார், மிருதுலா பட்கர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது,

இது ஒரு ஜனநாயக நாடு. நாம் ஒரு அரசைத் தேர்வு செய்துள்ளோம். நாடாளுமன்றத்தில் லோக்பால் குறித்து விவாதம் நடைபெற்றுவரும் நிலையில் அதற்கு இணையானதொரு பிரசாரத்தை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. உங்கள் போராட்டம் நாடாளுமன்ற செயல்பாட்டில் குறுக்கிடுவதாக இல்லையா?. லோக்பால் மசோதா குறித்து மக்கள் தேர்வு செய்த பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்கள். சட்டம்-ஒழுங்கை காக்க நாங்கள் உறுதிமொழி எடு்ததுள்ளோம். எந்த சட்டத்தின் கீழ் நீங்கள் வாடகையைக் குறைக்கச் சொல்கிறீர்கள்?.

உங்களுக்கு வேண்டுமானால் அது சத்யாகிரகமாக இருக்கலாம். ஆனால் பிறருக்கு அது தொல்லை தானே?. சத்தியாக்கிரகத்தை விரும்பாத மக்களும் நாட்டில் இருக்கிறார்கள். பொதுக்கூட்டங்களால் மும்பையில் ஏற்கனவே கடும் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால் மும்பை மக்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடைத்தால் அங்கே போக வேண்டியது தானே? பிறகு ஏன் இங்கே தான் உண்ணாவிரதம் இருப்போம் என்கிறீர்கள். இடத்தில் என்ன இருக்கிறது?.

உங்களுக்காக எல்லாம் வாடகையைக் குறைக்கக்கோரி மகாராஷ்டிரா அரசு அதிகாரிகளைக் கேட்க முடியாது. அதற்குப் பதில் வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்யலாமே, மைதானம் எதற்கு என்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி:

இந் நிலையில் டிசம்பர் 27ம் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த டெல்லி போலீசார் ஹசாரே குழுவுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால், தற்போது அன்னா குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை எங்கு நடத்துவது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

THANKS : THATSTAMIL