Tuesday, March 15, 2011

பட்டது போதும், அதனால் விட்டதைப் பிடிக்கப்பார்!.


இரு 'கை' கூப்பி வருவான்!.
தேர்தல் வந்ததும்


 “இலை” யோடு விளையாட வருவான்!  


இனித்து ம் புளித்தும் "மாம்பழ” மாகவும் வருவான்!.




சுட்டெரிக்கும் “சூரியன்” உதித்தால் 

 எரிக்கும் “தாமரை" யாகவும் வருவான்!.


 

பின் அது மறையும்போது ஏற்படும் “நட்சத்திர" மாகவும் வருவான்!.





அரசு அமைக்க “முரசு” கொட்டியும் வருவான்!.

 



உன் ஓட்டை அறுக்க “கதிர் அருவாளுடனும்” வருவான்






பழுதுபார்க்க “அருவாள் சுத்தி” யுடனும் வருவான்!.


 

ஓட்டை வாங்கும் வரை “பம்பரமாகவும்” சுழல்வான்!.
 

சுயமாக நின்று பல சி(ன்)னத்துடனும் வருவான்!.






கிராம பஞ்சாயத்தில் பாமரன் வந்தும், இன்னும் 
கிராம பஞ்சாயத்தில் கூட நீயோ இல்லை!.

ஊர் ஆள யாரோ வந்தும், இன்னும்
ஊராட்சியில் நீயோ இல்லை!

பேரூராட்சியில் பலபேர்கள் வந்தும், இன்னுமங்கு
பெயரளவில் கூட உன் ஆட்சி இல்லை!.

சட்டமியற்ற சாமானியர்கள் வந்தும், இன்னும்
சட்டசபையில் நீயோ இல்லை!.

பார் ஆள யாரோ வந்தும், இன்னும்
பாராளுமன்றத்தில் நீயோ இல்லை!.

பிறை கூட தேய்ந்து வளரும்போது, நீயோ
தேய்பிறையாகவே உள்ளதேனோ?.

ஆளவந்தான்! அவன் ஆளையே விழுங்க வந்தான்!!
எத்தனை முறைதான் நீ ஓட்டை மட்டும் போட்டிடுவாய்?

பட்டது போதும், அதனால் விட்டதைப் பிடிக்கப்பார்!. விடாததையும் எட்டிப்பார்!. கொடுத்ததை எடுக்கப் பார்!.


ஆதலால் நீ போட்டியிடுவாய்! நமக்கே ஓட்டையும் போட்டிடுவாய்!!

ஓட்டிடும் சமுதாயமே! உன் இனத்தையும் அங்கு அனுப்பப்பார்!




THANKS : www.adiraimujeeb.blogspot.com

கடாஃபி - தினமணியின் நயவஞ்சகமும்

லிபிய அதிபர் மும்மார் கடாஃபி ஒரு சர்வாதிகாரி என்பதிலும், அவரது ஆட்சி பொற்கால ஆட்சியொன்றும் அல்ல என்பதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், உலக சர்வாதிகாரிகளில் மிகவும் மோசமான சர்வாதிகாரி என்றோ, ஏனைய ஆட்சியாளர்களைவிட அவரது தலைமையிலான ஆட்சி மோசமானதென்றோ வர்ணிக்கவும் முடியாது என்பதுதான் நிஜம்.

லிபிய அரசியலையும், லிபியாவின் கடந்த நூற்றாண்டு சரித்திரத்தையும் புரிந்து கொள்ளாமல் எழுதும் பல மேலைநாட்டுப் பத்திரிகைகளும், கடாஃபியை ஒரு கொடுங்கோலனாக வர்ணிப்பதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்த முயலும் தொலைக்காட்சிச் சேனல்களும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுபோல லிபியாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தைப் பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்துக்குக் குறிவைக்கும் ஏகாதிபத்திய சக்திகளும், பிரச்னையை வளர்க்க முயற்சிக்கின்றனவே தவிர, முறையான தீர்வுக்கு வித்திடவில்லை என்பதை யாருமே சொல்லத் தயாராக இல்லை. இதற்குக் காரணம், அதிபர் மும்மார் கடாஃபியை வீழ்த்தியாக வேண்டும் என்று மேலைநாடுகள் கடந்த 30 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருவதுதான்.
உலக எண்ணெய் வளத்தில் 2% லிபியாவில்தான் கிடைக்கிறது. இன்னும் பல எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்படக் கூடும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஆனால், எல்லா எண்ணெய்க் கிணறுகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தாமல், நீண்ட காலத்துக்கு லிபியாவின் எண்ணெய் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிபர் மும்மார் கடாஃபியின் பிடிவாதம், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு எரிச்சல் ஊட்டுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
1951-ல் இத்தாலியக் காலனியாக இருந்த லிபியா விடுதலை பெற்று சுதந்திர நாடானது. லிபியாவின் கிழக்குப் பகுதியான சைரனைக்காவின் முக்கியமான செனூசி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒன்றாவது இத்ரிஸ் என்கிற ராஜா, லிபியாவின் மன்னரானார். லிபியாவின் மேற்குப் பாதியில் கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா என்கிற மூன்று முக்கியமான ஆதிவாசி இனங்களும் கதத்ஃபா இனத்தவரான மும்மார் கடாஃபியின் தலைமையில் உள்நாட்டுக் கலகத்தில் ஈடுபட்டு, மன்னராக இருந்த முதலாம் இத்ரிசைப் பதவியிலிருந்து துரத்தி 1969-ல் ஆட்சியைக் கைப்பற்றின



.

1969-ல் பதவியைக் கைப்பற்றியது முதலே, ஆதிவாசி இனக் குழுக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வைத்திருக்கும் அதிபர் மும்மார் கடாஃபி மேற்கு லிபியாவின் முக்கியமான இனங்களான கதத்ஃபா, மாக்ரஹா, வர்ஃபல்லா, ஃபெஸ்ஸன், திரிபோலித்தானியா போன்றவற்றின் முழுமையான ஆதரவையும், நம்பிக்கையையும் தக்க வைத்திருப்பதால்தான் இன்றுவரை அதிபராகத் தொடர முடிகிறது. எகிப்து, டுனீசியா போன்ற நாடுகளின் அதிபர்களைப்போல அல்லாமல் மும்மார் கடாஃபி தனது பெயரில் வெளிநாட்டு வங்கிகளின் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றோ, அளவுக்கு அதிகமான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாகவோ அவர்மீது குற்றச்சாட்டுகளும் கிடையாது. தன்னைச் சுற்றி பெண்களைக் காவலர்களாக வைத்திருக்கிறார் என்கிற ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது.
மேற்கு லிபியாவைச் சேர்ந்த அதிபர் மும்மார் கடாஃபி புத்திசாலித்தனமாக கிழக்கு லிபியாவைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுக்களை பொருளாதார ரீதியாக வளர விடாமலும், அவர்கள் பெரிய அளவில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. மேலும், தனது ராணுவத்தையே முழுமையாக நம்பாமல் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதும் நிஜம்.
கிழக்கு லிபியாவைச் சேர்ந்த இனக்குழுக்கள்தான் இப்போது அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிராகக் கிளம்பி இருக்கிறார்கள். ஆனால், மேற்கு லிபியாவிலுள்ள எல்லா இனக்குழுக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால்தான், எகிப்திலும் டுனீசியாவிலும் ஏற்பட்டதுபோல, லிபியாவில் உள்நாட்டுக் கலகம் இன்னும் தொடர்கிறதே தவிர, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், லிபியாவின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டுப் புரட்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்கிற முனைப்புடன் வல்லரசு நாடுகள் செயல்படத் துடிக்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களைப் பாராசூட் மூலம் விநியோகம் செய்தால் என்ன என்று யோசனை கூறுகிறார். சவூதி அரேபியா மூலம் ஆயுதங்களைத் தந்து உதவினால் என்ன என்று அமெரிக்கா யோசிக்கிறது. புரட்சியாளர்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்தும் லிபிய அரசும் படைகளை முடக்க, அந்த நாட்டிலுள்ள விமானநிலையங்களின் மீது குண்டு வீசித் தகர்த்தால் என்ன என்று யோசனை கூறுகிறார் அமெரிக்க செனட்டர் ஜான் கெர்ரி. இன்னொரு செனட்டரான ஜான் மெக்கெய்ன், இராக்கில் நடத்தியதுபோல நேசப்படைகள் நுழைந்து, அதிபர் மும்மார் கடாஃபியைப் பதவியிலிருந்து அகற்றிப் புதிய ஆட்சியை நிறுவினால் தவறில்லை என்கிறார்.

லிபியாவில் உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதிபர் கடாஃபியின் அரசு, ஆட்சியை எதிர்த்துப் போராடும் புரட்சியாளர்களுக்கு எதிராகத் தனது முழு ராணுவ பலத்தையும் பிரயோகித்துக் கலகத்தை அடக்க முயற்சிக்கிறது என்பதும் உண்மை. அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?

நமது காஷ்மீரிலும்தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத்தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?
அதிபர் மும்மார் கடாஃபி அரசின் ராணுவத்தின் கை ஓங்கி வருவதாகவும், புரட்சியாளர்களின் எதிர்ப்புக் குறைந்து வருவதாகவும் தெரிகிறது. உள்நாட்டுக் கலகத்துக்கு மேற்கு லிபிய ஆதிவாசி இனக்குழுக்களுக்கும், கிழக்கு லிபிய இனக்குழுக்களுக்குமான பதவிப் போட்டிதான் காரணம். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாட்டினரின் அக்கறைக்குக் காரணம் லிபியாவின் எண்ணெய் வளம். 2003-ல் இராக். 2011-ல் லிபியா. என்றுதான் தணியும் இந்த ஏகாதிபத்திய மோகம், தெரியவில்லையே!

ஈழத்தமிழர்களுக்காக இந்தியா ஏன் கவலைப்படவில்லை - முன்பு அதே 'தினமணி'யின் சாடல்:-

'எங்கோ வியன்னாவில் தேரா சச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன் தாஸ் கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோ மீட்டர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இது காலத்தின் கேவலமான கோலமல்லவா?'
=====> (இது பஞ்சாப் கலவரம் பற்றிய தினமணி தலையங்கம்)

தனி ஈழம் அமைய இந்தியா உதவ வேண்டும் என்று தினமணி நாளேட்டில்,
'நமக்கெதற்குச்சுமை, நாம் ஏன் உதவ வேண்டும் என்ற எண்ணம் பாகிஸ்தானைப் பிரித்து வங்கதேசத்தை உருவாக்கிய போது இருக்கவில்லை. அப்போது இருந்த அதே கடமை உணர்வு இப்போதும் வேண்டும்' என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
'ஈழப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்காக, இந்தியாவிலிருந்து நமது வரிப்பணத்திலிருந்து, நம்மால் அனுப்பப்பட்ட 500 டிராக்டர்கள், இலங்கை அரசால் தென்னைமர வளர்ச்சிக் கழகத்துக்கும், முந்திரி கார்ப்பரேஷனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 50,000 வீடுகள் கட்ட நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசு அளித்த நிதியுதவி வெறும் 1,000 பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இதை மேற்பார்வை இடவோ, கேள்வி கேட்கவோ நமது இந்திய அரசுக்குத் துணிவும் இல்லை, மனமும் இல்லை.'

=====> (இது தனி ஈழம் பற்றிய தினமணி தலையங்கம்)

ஒரே மாதிரியான பிரச்சினையில், தினமணிக்கு எதற்கு இப்படி வெவ்வேறான கண்ணோட்டம்..? லிபியா பற்றி எழுதியதெல்லாம் சரிதான்..! அதில்...///அதற்காக, எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத மேலைநாட்டு ராணுவம் இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னையில் வலியப்போய் தலையிட்டு நியாயப் பஞ்சாயத்து நடத்த முயற்சிப்பதை எப்படி அனுமதிப்பது, அங்கீகரிப்பது?//// என்று எழுதியவுடன், "இதைத்தானே நாமும் செய்கிறோம்" என்று  தினமணிக்கு எங்கோ உறுத்தி இருக்கிறது..! உடனே, அது என்ன எழுதுகிறது என்றால்...///நமது காஷ்மீரிலும்(!?!)தான் பிரச்னை இருக்கிறது. நமது ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுகிறது. இது தவறு என்று கூறி நாளை அமெரிக்காவோ, சீனாவோ தனது ராணுவத்தை அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அனுப்பினால், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதை நாம் அனுமதிக்க முடியுமா?///---என்று காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியென எழுதி, அந்த மக்களை தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்திவிட்டு, அதை இந்திய உள்நாட்டுப்பிரச்சினை என்றும் மக்களுக்கு அறிவிக்கிறது. என்ன ஒரு கயமைத்தனம்..?

ஆனால், மிக தெளிவாக பாகிஸ்தான் வேறு நாடு என்று அறிந்திருந்தும், அதில் கிழக்கு பாகிஸ்தான் என்பது அதன் உள்நாட்டுப்பிரச்சினை என்று அறிந்திருந்தும், இந்தியா அதில் தலையிட்டு பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களாதேஷ் என்ற தனிநாடு அமைத்ததை ஆதரிக்கிறது. 

அதேபோல, இலங்கை வேறுநாடு என்று அறிந்தும், அங்கே ஈழத்தமிழர்களின் படுகொலை அதன் உள்நாட்டுப்பிரச்சினை என்று அறிந்தும், அதேபோன்ற ராணுவ நடவடிக்கை எடுத்து அதன்மூலம் இந்தியா தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறது.


"தனக்கென எதனை விரும்புகின்றானோ அதனைத் தனது சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் யாரும் உண்மையில் நம்பிக்கையாளர் இல்லை" [புஹாரி, முஸ்லிம், இப்னு மாஜா] என்பது நபி மொழியாக இருக்க, ஆனால், லிபியாவில் 41 வருஷங்கலாய்  ஜனநாயகத்தின்(?!?) மூலம் அதிபராக இருக்கும் ஒரு நபர், தனக்கு எதிரான இனக்குழு என்பதால் அதனைச்சார்ந்த மக்களை ஆயிரக்கணக்கில் அதிபர் மும்மார் கடாஃபி என்ற கொலைகாரன் கொன்று குவித்து வருவதை ஒரு வரியில் கூட கண்டிக்க மணம் இல்லையா தினமணிக்கு..? இதுதானே ராஜபக்சே என்ற கொடிய கொலைகாரன் செய்தது..? 

ஈழ மக்கள் உயிரை உணர முடிந்த தினமணிக்கு லிபிய மக்கள் உயிர் எல்லாம் உயிர் இல்லையா? ஈழ விவகாரத்தில் மனித உரிமை அத்துமீறல், அப்பாவிமக்கள் படுகொலை இதிலெல்லாம் 'அது உள்நாட்டு விவகாரம் அல்ல' என்று மிகவும் சரியான நிலைப்பாட்டை எடுக்கத்தெரிந்த தினமணிக்கு, காஷ்மீரிலும் லிபியாவிலும் மட்டும் ஏன் தெரியவில்லை..? ஏனிந்த இரட்டை நாக்கு..? ஏனிந்த இரட்டை மனநிலை..?



"தனக்கு எதிராக லிபியாவில் கடைசி மனிதன் உயிரோடு இருக்கும் வரை போரிடுவேன்" என்று தொலைக்காட்சியில் இந்த சைக்கோவின் பேட்டியை கண்டதும், மொத்த அரபு நாடுகளும் லிபிய அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்ததே..! அரபு லீகிலிருந்து லிபியாவை நீக்கியதே..! அதையெல்லாம் தினமணி குறிப்பிட தவிர்த்துவிட்டது. காரணம், கடாஃபியை ஏனோ வில்லனாக கூற தினமணிக்கு மனம் வரவில்லை. இந்த அக்கிரமக்காரனுக்கு ஏன் இந்த வக்காலத்து..? ஏன் எனில்..., "அமெரிக்கா ஆக்கிரமித்துவிடும் என்பதால் அது லிபியாவுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம், சரி, அப்போ, இந்திய ராணுவம் ஏன் லிபியா செல்லக்கூடாது" என்று வேறு கேட்டு எழுதும் நிலை வந்து விடக்கூடும் என்பதால் தினமணி கடாஃபியை திட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

இதற்குப்பெயர்தான் 'தனக்கொரு நீதி மற்றவனுக்கு ஒரு நீதி' எனும், நயவஞ்சகம். நரித்தனம். பாரபட்சம். இதையேதானே தினமணி சாடி இருக்கும் அமெரிக்காவும் மற்றவர்கள் விஷயத்தில் எடுக்கிறது..? நாம் பிறரை குறை சொல்லும் முன், நம் தவறு நம் அறிவுக்கு நன்கு புலப்பட்டும் அதை ஊத்தி மூடி பூசி மெழுகி மறைப்பது தவறல்லவா..? அதைத்தான் தினமணி இத்தலையங்கத்தில் சம்பந்தமே இலலாமல் காஷ்மீர் விவகாரத்தை இங்கிழுத்து அதில் இதை செய்திருக்கிறது.
 
முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)
 
நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (ஆதாரம்:அபுதாவூத்)

சமீபகாலமாய், கெட்ட ஆட்சியாளர்களை மக்கள் பதவிகளை விட்டு இறக்கி விரட்டுகிறார்கள் அல்லவா...? அவர்கள் எங்கே செல்கிறார்கள்..? (எனக்கு மெயிலில் ஒரு நண்பர் அனுப்பியது... கற்பனை புகைப்படம்..!)
THANKS : Sirkaali Sittappu.

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் எவை என்பதற்கான உடன்பாடு 15.03.2011 அன்று கையெழுத்தானது. இதில் திமுக தலைவர் கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் கையெழுத்திட்டனர்.

சென்னையில் 5 இடங்கள் : 1.மயிலாப்பூர் ,2.தி.நகர், 3.ராயபுரம்,4.திரு.வி.க., நகர்,5.அண்ணாநகர்


காஞ்சிபுரம் மாவட்டம்: 6.மதுராந்தகம், 7.ஆலந்தூர், 8. ஸ்ரீபெரும்புதூர்,


திருவள்ளூர் மாவட்டம்: .9. பூந்தமல்லி, 10. திருத்தணி. 11. ஆவடி


வேலூர் மாவட்டம்:12.சோளிங்கர், 13.வேலூர், 14..ஆம்பூர்


திருவண்ணாமலை மாவட்டம்: 15.செய்யாறு, 16.செங்கம், 17.கலசப்பாக்கம்


விழுப்புரம் மாவட்டம்: 18.ரிஷிவந்தியம்,


கடலூர் மாவட்டம்: 19.விருத்தாசலம்.


நாகை மாவட்டம் 20.மயிலாடுதுறை, 21. திருத்துறைப்பூண்டி


தஞ்சாவூர் மாவட்டம்: 21.பேராவூரணி, 22.பட்டுக்கோட்டை, 23.பாபநாசம்


புதுக்கோட்டை மாவட்டம்: 24.அறந்தாங்கி, 25. திருமயம்


சேலம் மாவட்டம்: 26.சேலம் (வடக்கு ). 27.ஆத்தூர்,


ஈரோடு மாவட்டம் : 28.மொடக்குறிச்சி, 29.ஈரோடு மேற்கு, 30 .காங்கேயம்.


திருப்பூர் மாவட்டம்: 31, திருப்பூர் தெற்கு, 32. அவினாசி


கிருஷ்ணகிரி மாவட்டம்: 33. கிருஷ்ணகிரி, 34. ஓசூர்,


சிவகங்கை மாவட்டம்: 35.சிவகங்கை, 36.காரைக்குடி.


கோவை மாவட்டம்: 37. தொண்டாமுத்தூர், 38. சிங்காநல்லூர் , 39 வால்பாறை .


நாமக்கல் மாவட்டம்: 40. திருச்செங்கோடு,


கரூர் மாவட்டம்: 41. கரூர்.


அரியலூர் மாவட்டம்: 42. அரியலூர்.


திருநெல்வேலி மாவட்டம்: 43. வாசுதேவநல்லூர், 44.கடையநல்லூர், 45. நான்குநேரி, 46. ராதாபுரம்.


கன்னியாகுமரி மாவட்டம்: 47. குளச்சல், 48. விளவங்ககோடு, 49. கிள்ளியூர்.





மதுரை மாவட்டம்: 50. மதுரை (வடக்கு) , 51. மதுரை ( தெற்கு), 52. திருப்பரங்குன்றம்.


விருதுநகர் மாவட்டம்: 53. விருதுநகர் .


ராமநாதபுரம் மாவட்டம்: 54. ராமநாதபுரம், 55. பரமக்குடி.


தூத்துக்குடி மாவட்டம்: 56. விளாத்திக்குளம், 57 . ஸ்ரீவைகுண்டம்.


திருச்சி மாவட்டம்: 58. மணப்பாறை , 59. முசிறி .


தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்: (63 தொகுதிகளில் போட்டி) , பா.ம.க., (30 தொகுதிகளில் போட்டி) , விடுதலை சிறுத்தைகள் (10 தொகுதிகளில் போட்டி) , கொங்குநாடு முன்னேற்ற கழகம் (7 தொகுதிகளில் போட்டி) , இந்திய யூனியன் முஸ்லிம்லீக் (2 தொகுதிகளில் போட்டி) , பெருந்தலைவர் மக்கள் கட்சி (1 தொகுதிகளில் போட்டி) , என முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 234 தொகுதிகளில் தி.மு.க., 120 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
THANKS : NAKKEERAN

Monday, March 14, 2011

அறிவாலயம் வந்த சிபிஐ அதிகாரிகள்...

புலி  வருகுது என்று புலி வந்தே விட்டது.   கனிமொழியை சிபிஐ விசாரிக்கப் போகிறார்கள், விசாரிக்கப் போகிறார்கள் என்று எதிர்ப்பார்த்து, எதிர்ப்பார்த்து காத்திருந்து, ஒரு வழியாக வந்தே விட்டார்கள் சிபிஐ அதிகாரிகள்

    பிணக்கில் இருந்த காங்கிரஸ் திமுக உறவு, நீண்ட இழுபறிக்குப் பிறகு, சிரி செய்ய பட்டு, மீண்டும் கூட்டணி என்று அறிவிக்கப் பட்டதால், சிபிஐ விசாரணை முடங்கி விடும் என்றும், இணைந்த கூட்டணிக்கான நிபந்தனையாக, கனிமொழி விசாரிக்கப் படக் கூடாது என்றும் தகவல்கள் வந்தன.


அறிவாலயம் வந்த சிபிஐ அதிகாரிகள்

அதன் படி, கனிமொழி விசாரிக்கப் பட மாட்டார் என்பது உறுதி செய்யப் படவில்லை என்றாலும், கருணாநிதிக்கு நெருக்கடி தராத வண்ணம், பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி தெரியாத வகையில் சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற உறுதி மொழி, கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைமையால் வழங்கப் பட்டதாக தெரிகிறது.  அதன்படி, காலை சிபிஐ அதிகாரிகள், கலைஞர் டிவி அலுவலகத்துக்கு காலை 10.30 மணி க்கு ருவது என்றும், அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலம் என்ற நூலகத்தில், தயாளு, கனிமொழி, அமிர்தம் மற்றும் கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் சரத்குமார் ஆகியோர் விசாரிக்கப் படுவார்கள் என்றும் திட்டமிடப் பட்டது.  



இந்தப் புன்னகை என்ன விலை.. ? (ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிங்கண்ணா)
கலைஞர் டிவியின் பின்புறம் உள்ள நுழைவாயில் வழியே வந்தால், பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாது என்றும், நேர்காணல் காரணமாக அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்கள் அதிகம் காணப்படுவதாலும், பத்திரிக்கையாளர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதாலும், ஊர் உலகத்துக்கு தெரியாமல் இந்த சோதனையை நடத்தி முடித்து விடலாம் என்ற திட்டமிட்டிருந்தார்கள்.


நம்பகிட்ட நடக்குமா ?  காலை சரியாக 6.40க்கு அனைத்து பத்திரிக்கையாள நண்பர்களுக்கும் இந்தத் தகவல், குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப் பட்டது.   இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெருமளவில், தொலைக்காட்சி கேமராக்களோடு குவிந்தனர்.    கனிமொழி, தயாளு, அமிர்தம் ஆகியோர், வந்திறங்கியது முதல், சிபிஐ அதிகாரிகள் கிளம்பியது வரை, முழுமையாக இச்செய்தியை கவர் செய்தனர்.


எது எப்படியோ....  நல்லபடியாக இந்த விசாரணை முடிந்தது.   அடுத்தரவுண்டு எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


THANKS : SAVUKKU
&
SIRKALI SITTHAPPU

ஒரு எஸ்.எம்.எஸ் ஸில் உடைந்த வாழ்க்கை

ஒரு எஸ்.எம்.எஸ் ஸில் உடைந்த வாழ்க்கை

எம்.பி.. படித்த அழகான இளம் பெண் அவர். பெற்றோர் ஏற்பாட்டின்படி சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவருடன் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. முதலிரவில், புது மனைவிக்காக காந்திருந்த மாப்பிள்ளையைத் தேடி முதலில் வந்தது ஒரு எஸ்.எம்.எஸ்...
'முதலிரவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
- இப்படிக்கு, உங்கள் மனைவியின் முதல் கணவர்’.ரொம்பவே அதிர்ந்து போனவருக்குக்...
ரொம்பவே அதிர்ந்து போனவருக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. உள்ளே நுழைந்த புதுமனைவியை கடுகடுவென்றே எதிர்நோக்கியவர், ''உனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதா..?'' என்று நேரடியாகவே கேட்டார்.
 
''என்ன இப்படி கேட்கறீங்க... அபாண்டமா பேசறீங்க?'' என்று படபடத்த அந்தப் பெண்ணின் கண்களில் பதற்றத்தைவிட, கள்ளத்தனம் இருப்பதாகப் பட்டது மாப்பிள்ளைக்கு. முதலிரவு அறையிலிருந்து ஹாலுக்கு மாறியது பஞ்சாயத்து.
''எங்க பொண்ணைப் பிடிக்காத யாரோ, இப்படி எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்காங்க'' என்று அழுகையும் ஆத்திரமுமாகக் குமுறினர் பெண்ணின் பெற்றோர்.
''எஸ்.எம்.எஸ்-ஸுக்காக ஒரு பெண்ணோட வாழ்க்கையை பாழாக்கிடாதடா...'' என்று மாப்பிள்ளையின் பெற்றோரும் பரிந்து பேசினர்.
''விசாரிப்போம். பொய்யா இருந்தா, கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டு இந்தப் பெண்ணை ஏத்துக்கறேன்!'' என்றார் உறுதியாக மாப்பிள்ளை.
''எஸ்.எம்.எஸ். அனுப்பினது யாருனு கண்டுபிடிச்சுட்டா, பிரச்னைக்குத் தீர்வு கிடைச்சுடும்'' என்றபடி பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தனர் மாப்பிள்ளையின் பெற்றோர். எஸ்.எம்.எஸ். அனுப்பிய மொபைல் நம்பரைத் தொடர்பு கொண்டபோது, எப்போதும் 'ஸ்விச்டு ஆஃப்’! அதன் முகவரியைக் கண்டறிந்து தேடிச் சென்றபோது, அங்கே இருந்தது... இடிந்துபோன ஒரு வீடு!
ஏதாவது ஒரு சமூக வலைதளத்தில் சிக்கக்கூடும் என்று அனுமானித்து... மொபைல் எண் பெறுவதற்காக கொடுக்கப்பட்டிருந்த முகவரியில் இருந்த பெயரை வைத்து... ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று சலித்துத் தேடினோம். ஆர்குட் தளத்தில் சிக்கியது அந்த மொபைல் எண்ணுக்குரிய நபரின் ஒரு -மெயில் .டி.
ஒரு பெண்ணின் பெயரில், 'மை போட்டோஸ்!’ என்று அந்த .டி-க்கு மெயில் அனுப்பினோம். அதனுடன் ரகசிய மென்பொருள் (spy software) இணைக்கப்பட்டிருந்தது. அந்த மெயிலைத் திறந்ததும் நாங்கள் அனுப்பிய ரகசிய மென்பொருள், அந்த கம்ப்யூட்டரில் ஊடுருவியது. அதன் மூலமாக அந்தக் கம்ப்யூட்டரை அலசியபோது, அதிர்ச்சியாகிவிட்டோம். அந்த புதுமணப் பெண்ணும், ஒரு ஆணும் இணைந்து எடுத்த புகைப்படங்களுடன், அவர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்ட சான்றிதழும் 'ஸ்கேன்செய்யப்பட்டு 'சேவ்செய்யப்படிருந்தது.
மணமகனின் பெற்றோரிடம், 'ஆம்... அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவர். எஸ்.எம்.எஸ். அனுப்பியவன் அவரின் கணவன்என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தோம். பெண்ணின் பெற்றோரிடம் அதைக் காட்ட, கலங்கிவிட்டனர். தன் முகமூடி கலைந்ததால் என்ன நடந்தது என்பதை தானே விளக்கினார் புதுப்பெண்.
அலுவலகத்தில் உடன் வேலை பார்த்த ஒருவரை காதலித்திருக்கிறார். இரு வீட்டிலுமே சம்மதிக்க மாட்டார்கள் என்று நினைத்தவர்கள், தமிழ் சினிமா ஒன்று தந்த ஃபார்முலாவை பின்பற்றியிருக்கிறார்கள். அதாவது, ''ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு, உன் வீட்டுல நீ இரு; என் வீட்டுல நான் இருக்கேன். நேரம் வரும்போது சொல்லிக்கலாம். அதுவரைக்கும் ஃப்ரெண்ட்ஸா மட்டுமே இருப்போம்'' என்று!
அதற்குப் பின்னான நாட்களில்... அவன், பல பெண்களிடமும் தொடர்பில் இருப்பவன் என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்திருக்கிறது. இருவருக்கும் இடையே சண்டைகள் ஆரம்பமாகி, ''நாம பிரிஞ்டலாம்...'' என்று பரஸ்பரம் பேசிப் பிரிந்திருக்கிறார்கள். வேலையையும் வேறு கம்பெனிக்கு மாற்றிக் கொண்டுவிட்டார் இந்தப் பெண். வேறு ஒருவருக்கும் கழுத்தை நீட்டிவிட்டார். ஆனால், எஸ்.எம்.எஸ். அனுப்பி பழிதீர்த்துக் கொண்டுவிட்டான் முதல் கணவன்!
தற்போது புதுமாப்பிள்ளை விவாகரத்து பெற்றுவிட, முதல் (காதல்) கணவனிடம் விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறாள் அந்தப் பெண் பரிதாபமாக!
பிரபல சினிமா நடிகர் ஒருவரின் சொந்தக் கதையை நினைவு படுத்துகிறதல்லவா இந்த வழக்கு. இதுபோன்ற ரகசிய திருமணங்கள் இப்போது பெருகிக் கொண்டிருக்கின்றன. ஊரறிய நடக்கும் திருமணங்களே சமயங்களில், வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் இன்றைய காலத்தில், சினிமாவைப் பார்த்துவிட்டு, இப்படி ரகசிய தாலி கட்டிக்கொள்வது... சின்னப்பிள்ளைத்தனம் என்பதைத் தவிர வேறில்லை! பல்வேறு காரணங்களால் பிரிய நேரிடும்போது... மீளவே முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டு விடுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம் இளசுகளே!
'ஆர்குட்’, 'ஃபேஸ்புக்போன்ற சமூக வலைதளங்கள், இன்றைக்கு படுபரபரப்பாக பேசப்படுகின்றன. காலையில் காபி குடித்ததில் ஆரம்பித்து, மாலையில் கணவருடன் எங்கெல்லாம் சென்று வந்தோம் என்பது வரையிலான அந்தரங்க தகவல்களையும்கூட அந்த இணைய தளங்கள் மூலம் ஊருக்கே பந்தி வைக்கும் கலாசாரம் பரவி வருகிறது. அப்படி பந்தி வைத்த அந்த இளம் பெண் பட்டபாடு..?
Thanks - Vikatan
&
Sirkali Sithappu