Thursday, January 19, 2012

அட கேடு கெட்ட உயர் நீதி மன்றமே!...

தாரமங்கலம் அருகே, ஐகோர்ட் அனுமதி பெற்று நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சியில், கவர்ச்சி உடையோடு அழகிகள் குத்தாட்டம் போட்டது, "ஜொள்' ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன், கோவில் பண்டிகையின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாளடைவில் நிகழ்ச்சியில் நடனமாடும் அழகிகள் அரைகுறை ஆடையுடன், ஆபாசமாக ஆடியதால், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், சேலம் மாவட்டத்தில் பண்டிகையின் போது, கலைக்குழுவினர் நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால், சேலம் மாவட்டத்தில் சில ஆண்டுகள் கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.  
இந்நிலையில், பண்டிகை நடத்தும் குழுவினர் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்பது பாரம்பரியமாக நடத்தப்படுவது. அதற்கு தடை விதிக்கக் கூடாது எனக் கூறி ஐகோர்ட்டில் உத்தரவு பெற்று, ஆங்காங்கே கோவில் பண்டிகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த துவங்கினர்.

 சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த ராமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, ஐகோர்ட் அனுமதி பெற்று நேற்று முன்தினம் இரவு, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகிகள் அரைகுறை உடையுடன், ஆபாச செய்கைகளுடன் குத்தாட்டம் போட்டனர்.

அழகிகளின் கவர்ச்சி நடனம், நிகழ்ச்சியை காண வந்த பல ஆயிரம், "ஜொள்' ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொருபுற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் தர்மசங்கடப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவு என்பதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் நடவடிக்கை எடுக்க முடியாமல், நிகழ்ச்சியை கடைசி வரை கண்டு ரசித்தனர். 

Thursday, January 12, 2012

உதயக்குமார் வீட்டு முன் ஜன.30 ல் ஒப்பாரி போராட்டம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடும் உதயக்குமார் வீட்டுமுன் ஒப்பாரி போராட்டம் நடத்த உள்ளதாக, அணுஉலை ஆதரவு இயக்க தலைவர் சத்தியசீலன் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின்நிலைய ஆதரவு இயக்க தலைவர்களில் ஒருவரான சத்தியசீலன் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூடங்குளத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவர், அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் கும்பல்களுடன் சேர்ந்து, அணுமின்நிலையம் முன் அமர்ந்து விஞ்ஞானிகள், இன்ஜினியர்களை மிரட்டிவருகிறார். அரசு அனுமதியளித்துள்ளபடி, மிகவும் சொற்பமான இன்ஜினியர்கள் மட்டும் அங்கு சென்றுவருகின்றனர். எனவே, அவர்களது உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கும்பலுடன் இணைந்து பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரியை வெளியேற்ற வேண்டும். அணுமின் நிலையம் விரைவில் மின்உற்பத்தியை துவக்கவேண்டும். அதற்கான தேதியை உடனடியாக பிரதமர் அறிவிக்கவேண்டும்.

வரும் 30 ம் தேதி கூடங்குளத்திற்கு எதிராக போராடும் அமைப்பினர் அணுஉலையின் மாதிரி படத்தை வைத்து வைத்து போராட உள்ளதாக கூறுகின்றனர். அதே நாளில், அணுஉலை உற்பத்தியை துவக்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் சர்வசமய பிரார்த்தனை மேற்கொள்வோம். தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வீட்டுமுன் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார். அவருடன் அணுஉலைக்கு ஆதரவான இயக்கத்தை சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் செட்டிகுளம் விஜயன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

எந்த கட்சியை எதிர்த்தும் தேர்தல் பிரசாரம் இல்லை என்று அன்னா ஹசாரே குழு அறிவிப்பு

ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே குழுவினர், நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேர்தல் பிரசாரம் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால், திடீரென்று அவர்கள் தங்கள் முடிவை மாற்றி கொண்டுள்ளனர். எந்த கட்சியை எதிர்த்தும் தேர்தல் பிரசாரம் இல்லை என்று அன்னா ஹசாரே குழு அறிவித்துள்ளது.

Friday, January 6, 2012

முத்திரைத்தாள் மோசடி சாந்தி பூஷனுக்கு ரூ. 27 லட்சம் அபராதம்

புதுடெல்லி, ஜன.6-
 
ரூ. 1.35 கோடி மதிப்பிலான வீட்டுமனை ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை  விட குறைவாக முத்திரைத்தாள் கட்டணம் செலுத்திய சாந்தி பூஷனுக்கு ரூ. 27 லட்சம் அபராதம் விதித்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும், தான் முத்திரைத்தாள் கட்டணம் குறித்து எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என்று சாந்தி பூஷன் கூறி வருகிறார்