Tuesday, July 19, 2011

நிலம் அபகரிப்பு: டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் செய்யலாம்- தனி அதிகாரி நியமனம்

தமிழ்நாடு முழுவதும் நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டங்கள் தோறும் போலீஸ் நிலையங்களில் சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நில மோசடி தொடர்பான புகார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நில மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகமான டி.ஜி.பி. அலுவலகத்திலும் நில மோசடி புகார்களை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் காக அங்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

அலுவலக பொறுப்பாளராக சட்டம்- ஒழுங்கு உதவி ஐ.ஜி. சத்திய பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் 9597877718, 044 28448000 ஆகிய டெலிபோன் எண்களுக்கு புகார் செய்யலாம். இ-மெயில் முகவரி: aig-io@yahoo.com இதுகுறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கூறியதாவது:- நில மோசடி தொடர்பாக புகார் தெரிவிக்க விரும்பு கிறவர்கள் இந்த அலுவலகத் துக்கு சென்று புகார் மனுக்களை கொடுக்கலாம்.

அவை சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். நில அபகரிப்பு மோசடி தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ள சிறப்பு பிரிவுகள் நடத்தும் விசாரணையின் முன்னேற்றத்தையும், இந்த அலுவலகம் கண்காணிக் கும் இந்த அலுவலக பொறுப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment