Friday, August 19, 2011

அண்ணா ஹசாரே வாழ்க்கை வரலாறு....

அண்ணா ஹஜாரேயொன்றும் பெரிய யோக்கிய சிகாமணியல்ல. அவரால் தேசீயவாத காங்கிரஸ் கட்சியின் மந்திரி சுரேஷ் ஜெயின் பதவி விலகினார் என்று பீற்றிக்கொள்கிறார்கள். ஆனால், சுரேஷ் ஜெயின் பதவி விலகக் காரணமாக இருந்த பி.பி.சாவந்த் கமிட்டியின் அறிக்கையில், அண்ணா ஹஜாரேயின் தொண்டு நிறுவனங்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனது பிறந்த நாளுக்காக, தொண்டு நிறுவனத்திலிருந்து 2.21 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவிர நிர்வாகச் சீர்கேடு தொடங்கி, கட்டப்பஞ்சாயது வரை அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் அந்த அறிக்கையில் உள்ளன. இவ்வளவு ஏன், ஒரு வழக்கை கடந்த 13-07-11 அன்றுதான் சமரசப்பேச்சு வார்த்தை மூலம் வாபஸ் பெறச்செய்திருக்கிறார்.
அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது, விமானக்குண்டு வீச்சில் அவரது சகாக்கள் இறந்துவிட்டதாகவும், இவர் மட்டும் தப்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட தினத்தன்று எந்த விமானத்தாக்குதல்களும் நடைபெறவேயில்லை என்று பல ஆங்கிலப் பத்திரிகைகளில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 1975 -ம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர், அதே ஆண்டு ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட் துவங்கி, அரசாங்கத்திடமிருந்து நிதியுதவியும் பெற்றிருக்கிறார். இது விதிமுறைகளுக்குப் புறம்பானது. அரசியல்வாதிகளின் தயவு தாட்சணியமின்றி இதை அவரால் செய்திருக்க முடியாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
நன்றி தினமலர் வாசகர்

No comments:

Post a Comment