இந்த, 'மக்கள்’ பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக, கடந்த ஆறு வருடங்களாகப் போராடி வரும் ஜகத்சிங்பூர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் அல்ல.
இந்த 'மக்கள்’ 'கங்கை ஆறு மாசுபட்டு வருகிறது அதனால், சுரங்கத் தொழிலைத் தடை செய்ய வேண்டும்!’
என்று கூறி பட்டினிப் போராட்டம் நடத்திச் செத்துப்போன சுவாமி நிகாமானந்த்துக்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல.
இந்த 'மக்கள்’ நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வருகிற சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பவர்கள் அல்ல.
இந்த 'மக்கள்’ ஹரியானாவிலும், நொய்டாவிலும் தற்கொலை செய்து சாகும் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கொதித்தவர்கள் அல்ல.
இந்த 'மக்கள்’ நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆதிவாசிகளின் நிலையை உணர்ந்தவர்கள் அல்ல.
ஆனால், அண்ணா ஹசறேவின் உண்ணாவிரதத்திர்க்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆதரவு பெருகுகிறது என்கிறார்கள். உண்மையில் இது வெறும் நாடகப் பிரசாரம்!'' என்று காட்டத்தோடு வெடித்திருக்கிறார் அருந்ததி ராய்.
No comments:
Post a Comment