தாரமங்கலம் அருகே, ஐகோர்ட் அனுமதி பெற்று நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சியில், கவர்ச்சி உடையோடு அழகிகள் குத்தாட்டம் போட்டது, "ஜொள்' ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன், கோவில் பண்டிகையின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாளடைவில் நிகழ்ச்சியில் நடனமாடும் அழகிகள் அரைகுறை ஆடையுடன், ஆபாசமாக ஆடியதால், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், சேலம் மாவட்டத்தில் பண்டிகையின் போது, கலைக்குழுவினர் நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால், சேலம் மாவட்டத்தில் சில ஆண்டுகள் கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், பண்டிகை நடத்தும் குழுவினர் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்பது பாரம்பரியமாக நடத்தப்படுவது. அதற்கு தடை விதிக்கக் கூடாது எனக் கூறி ஐகோர்ட்டில் உத்தரவு பெற்று, ஆங்காங்கே கோவில் பண்டிகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த துவங்கினர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த ராமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, ஐகோர்ட் அனுமதி பெற்று நேற்று முன்தினம் இரவு, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகிகள் அரைகுறை உடையுடன், ஆபாச செய்கைகளுடன் குத்தாட்டம் போட்டனர்.
அழகிகளின் கவர்ச்சி நடனம், நிகழ்ச்சியை காண வந்த பல ஆயிரம், "ஜொள்' ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொருபுற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் தர்மசங்கடப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவு என்பதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் நடவடிக்கை எடுக்க முடியாமல், நிகழ்ச்சியை கடைசி வரை கண்டு ரசித்தனர்.
No comments:
Post a Comment