திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடும் உதயக்குமார் வீட்டுமுன் ஒப்பாரி போராட்டம் நடத்த உள்ளதாக, அணுஉலை ஆதரவு இயக்க தலைவர் சத்தியசீலன் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின்நிலைய ஆதரவு இயக்க தலைவர்களில் ஒருவரான சத்தியசீலன் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூடங்குளத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவர், அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் கும்பல்களுடன் சேர்ந்து, அணுமின்நிலையம் முன் அமர்ந்து விஞ்ஞானிகள், இன்ஜினியர்களை மிரட்டிவருகிறார். அரசு அனுமதியளித்துள்ளபடி, மிகவும் சொற்பமான இன்ஜினியர்கள் மட்டும் அங்கு சென்றுவருகின்றனர். எனவே, அவர்களது உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கும்பலுடன் இணைந்து பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரியை வெளியேற்ற வேண்டும். அணுமின் நிலையம் விரைவில் மின்உற்பத்தியை துவக்கவேண்டும். அதற்கான தேதியை உடனடியாக பிரதமர் அறிவிக்கவேண்டும்.
வரும் 30 ம் தேதி கூடங்குளத்திற்கு எதிராக போராடும் அமைப்பினர் அணுஉலையின் மாதிரி படத்தை வைத்து வைத்து போராட உள்ளதாக கூறுகின்றனர். அதே நாளில், அணுஉலை உற்பத்தியை துவக்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் சர்வசமய பிரார்த்தனை மேற்கொள்வோம். தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வீட்டுமுன் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார். அவருடன் அணுஉலைக்கு ஆதரவான இயக்கத்தை சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் செட்டிகுளம் விஜயன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
No comments:
Post a Comment