Tuesday, March 15, 2011

பட்டது போதும், அதனால் விட்டதைப் பிடிக்கப்பார்!.


இரு 'கை' கூப்பி வருவான்!.
தேர்தல் வந்ததும்


 “இலை” யோடு விளையாட வருவான்!  


இனித்து ம் புளித்தும் "மாம்பழ” மாகவும் வருவான்!.




சுட்டெரிக்கும் “சூரியன்” உதித்தால் 

 எரிக்கும் “தாமரை" யாகவும் வருவான்!.


 

பின் அது மறையும்போது ஏற்படும் “நட்சத்திர" மாகவும் வருவான்!.





அரசு அமைக்க “முரசு” கொட்டியும் வருவான்!.

 



உன் ஓட்டை அறுக்க “கதிர் அருவாளுடனும்” வருவான்






பழுதுபார்க்க “அருவாள் சுத்தி” யுடனும் வருவான்!.


 

ஓட்டை வாங்கும் வரை “பம்பரமாகவும்” சுழல்வான்!.
 

சுயமாக நின்று பல சி(ன்)னத்துடனும் வருவான்!.






கிராம பஞ்சாயத்தில் பாமரன் வந்தும், இன்னும் 
கிராம பஞ்சாயத்தில் கூட நீயோ இல்லை!.

ஊர் ஆள யாரோ வந்தும், இன்னும்
ஊராட்சியில் நீயோ இல்லை!

பேரூராட்சியில் பலபேர்கள் வந்தும், இன்னுமங்கு
பெயரளவில் கூட உன் ஆட்சி இல்லை!.

சட்டமியற்ற சாமானியர்கள் வந்தும், இன்னும்
சட்டசபையில் நீயோ இல்லை!.

பார் ஆள யாரோ வந்தும், இன்னும்
பாராளுமன்றத்தில் நீயோ இல்லை!.

பிறை கூட தேய்ந்து வளரும்போது, நீயோ
தேய்பிறையாகவே உள்ளதேனோ?.

ஆளவந்தான்! அவன் ஆளையே விழுங்க வந்தான்!!
எத்தனை முறைதான் நீ ஓட்டை மட்டும் போட்டிடுவாய்?

பட்டது போதும், அதனால் விட்டதைப் பிடிக்கப்பார்!. விடாததையும் எட்டிப்பார்!. கொடுத்ததை எடுக்கப் பார்!.


ஆதலால் நீ போட்டியிடுவாய்! நமக்கே ஓட்டையும் போட்டிடுவாய்!!

ஓட்டிடும் சமுதாயமே! உன் இனத்தையும் அங்கு அனுப்பப்பார்!




THANKS : www.adiraimujeeb.blogspot.com

No comments:

Post a Comment