Wednesday, March 9, 2011

கடந்த இரண்டு நாட்களாக நடந்த ராஜினாமா நாடகத்தில் நடந்தேறியவை

அழகிரி:நான் மந்திரியா இருக்கப்போயித்தானே இந்த எதிர்கட்சிகாரனுங்க ஹிந்திலேயும்,இங்க்லீஷ்லேயும் கேள்வியா கேட்டு கொல்லுறாங்க டேபுளுக்கு கீழ கூட குனியா விடமாட்டேன்குறங்க..  எப்படியாவது மந்திரி பதவியை ராஜினாமா செஞ்சு எஸ்கேப் ஆகிடலாம்ன்னு பார்த்தா விடமாட்டாரு போல தலைவரு அஆங்... டெல்ல்லிலேருந்து  தமிழ்நாட்டுக்கு  எஸ்கேப் ஆகலாம்னா விடமாட்டேன்னு சொல்றாங்களே..(.சொல்லால் அடிச்ச
 சுந்தரா...)

ஸ்டாலின்;அப்பாடி.....ராஜினாமாவ வாபஸ் வாங்கி என் வயித்துல பால வார்த்துட்டாறு...இல்லாட்டி அழகிரி தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்து நமக்கு போட்டியா உட்கார்ந்துடுவாறு.....(அண்ணன் என்னடா தம்பி என்னடா அவரசமான உலகத்திலே)

 
கனிமொழி:அம்மாடியோ....தப்பிச்சேன்...ராசாவும்கைவிட்டுட்டாறு .காங்கிரஸ்காரங்கள பகைச்சா நமக்கும் திகார்ல ஒரு செல்ல ரெடிபண்ணிருப்பாங்க..(ராசாவே உன்ன நம்பி..)


ராசாத்தியம்மாள்: நல்லவேளை நானும் தப்பிச்சேன்....வயசான காலத்துல இந்த சி.பி.ஐ., விசாரணை, ரைடுன்னு அலைய  முடியுமா? இனிமே இந்த ராசா நம்பள காட்டி குடுக்காம இருக்கணும் (பாலக்காடு ராசாவுக்கு ஒரு அம்மா மாமி )




ராசா: எங்கே காங்கிரஸ் காரங்க உறவை வெட்டிவிட்டு...நம்மள திகார்லையே  நிரந்தரமா இருக்க விட்டுருவாரோன்னு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன் . அப்படி ஏதும் நடக்கல சீக்கிரம் வெளியே வந்துடலாம். (எங்கே செல்லும் இந்த பாதை....)
T.R.பாலு: நான் கட்சியில சீனியரு. நான் எம்.பி.யாவே இருக்கேன். நேற்று வந்தவுங்க மந்திரியாகிட்டாங்க...எல்லோரும் ராஜினாமான்னதும் எனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் இல்லேன்னு சந்தோஷ பட்டேன்.இப்படி வாபஸ் வாங்கி என் நினைப்பில மண்ணை போட்டுட்டாரே.....(என்ன பாடச்சொல்லாத...நான் கண்டபடி பாடிப்புடுவேன்...)

திருமா: காங்கிரஸ் வராட்டி ஒரு ரெண்டு செட்டு கேடைக்கும்குற நப்பாசைல கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ...நல்ல வேலை வீரமணி பக்கம் வாசிட்டதாலே மீசைல மண்ணு ஒத்தலைன்னு சொல்லிக்கலாம். .(வரவு எட்டணா... செலவு பத்தணா..)

 
வீரமணி: இவரு நாடகத்தை உண்மைன்னு நம்பி தன்மானம் அது இதுன்னு பேசிட்டேன்.இப்ப இவரு ராஜினாமாவ வாபஸ்  வாங்கி  என் மூஞ்சில கரிய பூசிட்டாரே....நாளைக்கே நம்ம ராகுலுக்கு ஒரு ஒ போட்டுட்ட எல்லாம் சரியாகிடும்னு நேனைக்கேறேன் (ராகுல்ஜி.. கண்ணு பட போகிடய்யா சின்னக்கவுண்டரீ..)



E.V.K.S.இளங்கோவன்: அடடா....தி.மு.க.ட்டேர்ந்து காங்கிரஸ்காரங்களுக்கு விடுதலை கிடைச்சுருச்சுன்னு நினைச்சேன்.வாபஸ் வாங்கிட்டாரே... மறுபடியும்  நம்ம அடிமைதானா? (எங்கே நிம்மதி எங்கே நிம்மதி  அங்கே  எனக்கோர்  குழியிருக்கு...) 
ராமதாஸ்: கலைஞரு கோவணத்த உருவுவதுல  கெட்டிக்காரு....நல்லவேளை நமக்கு ஒரு தொகுதியோட போச்சு....(எங்கேப்பா நம்ம காதர் பாய்.. )
காதர் பாய்  - முஸ்லிம்லீக்... - ஐயோ தூக்கத்துல யாரோ எதையோ எடுத்துக்கிட்டு என்ன விரட்டுராங்களே...ஐயோ நான் தொப்பிய கலட்டிடேன் நான் முஸ்லிம் இல்ல நாம் முஸ்லிம் இல்லப்பா.. அப்பாடா கனவா..எனக்கு பேச்சே வரல....Mr கருநாய்நிதி..எப்படி என்னை  மோசம்  செய்துவிட்டாயே. உன்னை நான்  அறிவேன்  என்னையன்றி  யாரறிவாய்...  ஐயோ ஐயோ வடை போச்சே ) 

ஜெயலலிதா:காங்கிரஸ்காரங்கவருவாங்கன்னு வைகோ.கம்யூனிஸ்ட்களுக்கு   இடம் ஒதுக்காம காத்திருந்தேன். இப்படி கவுத்துட்டாங்களே....நல்லவேளை வைகோ...கம்யூனிஸ்ட்லாம் இதை அவமானமா நினைக்கலே...(நடக்கும் என்பார் நடக்காது நடக்காதேன்பார் நடந்துவிடும்...)தைரியமாக சொல் நீ மனிதன் தானா.. ).

வைகோ: நல்லவேளை காங்கிரசோடு இந்தம்மா கூட்டணி வச்சுக்கு நம்மள அம்போன்னு விட்டுடோம்ன்னு பயந்துட்டேன். அது நடக்கல...அடிக்கடி ஜெயாவ பாராட்டி கலைங்கர வேருப்பெத்தனும்..(தைரியமாக சொல் நீ மனிதன்தானா...)
பி.ஜே.பி: சே...காங்கிரஸ் காரங்க எல்லா தொகுதியிலும்  தனியா நின்னு டெபாசிட் இழந்து, நமக்கு துணையா இருப்பாங்கன்னு பார்த்தேன்...வடை போச்சே....முதல்ல 234 தொகுதிக்கு ஆல புடிக்கணும். இதுல பாட்டு வேறயா... (விநாயகனே எனக்கு இப்படி அடியில் வினை வைத்தவனே )

நன்றி : சிர்காழி சித்தப்பு.


No comments:

Post a Comment