புலி வருகுது என்று புலி வந்தே விட்டது. கனிமொழியை சிபிஐ விசாரிக்கப் போகிறார்கள், விசாரிக்கப் போகிறார்கள் என்று எதிர்ப்பார்த்து, எதிர்ப்பார்த்து காத்திருந்து, ஒரு வழியாக வந்தே விட்டார்கள் சிபிஐ அதிகாரிகள்.
பிணக்கில் இருந்த காங்கிரஸ் திமுக உறவு, நீண்ட இழுபறிக்குப் பிறகு, சிரி செய்ய பட்டு, மீண்டும் கூட்டணி என்று அறிவிக்கப் பட்டதால், சிபிஐ விசாரணை முடங்கி விடும் என்றும், இணைந்த கூட்டணிக்கான நிபந்தனையாக, கனிமொழி விசாரிக்கப் படக் கூடாது என்றும் தகவல்கள் வந்தன.
அதன் படி, கனிமொழி விசாரிக்கப் பட மாட்டார் என்பது உறுதி செய்யப் படவில்லை என்றாலும், கருணாநிதிக்கு நெருக்கடி தராத வண்ணம், பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி தெரியாத வகையில் சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற உறுதி மொழி, கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைமையால் வழங்கப் பட்டதாக தெரிகிறது. அதன்படி, காலை சிபிஐ அதிகாரிகள், கலைஞர் டிவி அலுவலகத்துக்கு காலை 10.30 மணி க்கு ருவது என்றும், அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலம் என்ற நூலகத்தில், தயாளு, கனிமொழி, அமிர்தம் மற்றும் கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் சரத்குமார் ஆகியோர் விசாரிக்கப் படுவார்கள் என்றும் திட்டமிடப் பட்டது.
நம்பகிட்ட நடக்குமா ? காலை சரியாக 6.40க்கு அனைத்து பத்திரிக்கையாள நண்பர்களுக்கும் இந்தத் தகவல், குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப் பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெருமளவில், தொலைக்காட்சி கேமராக்களோடு குவிந்தனர். கனிமொழி, தயாளு, அமிர்தம் ஆகியோர், வந்திறங்கியது முதல், சிபிஐ அதிகாரிகள் கிளம்பியது வரை, முழுமையாக இச்செய்தியை கவர் செய்தனர்.
எது எப்படியோ.... நல்லபடியாக இந்த விசாரணை முடிந்தது. அடுத்தரவுண்டு எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
THANKS : SAVUKKU
&
SIRKALI SITTHAPPU
பிணக்கில் இருந்த காங்கிரஸ் திமுக உறவு, நீண்ட இழுபறிக்குப் பிறகு, சிரி செய்ய பட்டு, மீண்டும் கூட்டணி என்று அறிவிக்கப் பட்டதால், சிபிஐ விசாரணை முடங்கி விடும் என்றும், இணைந்த கூட்டணிக்கான நிபந்தனையாக, கனிமொழி விசாரிக்கப் படக் கூடாது என்றும் தகவல்கள் வந்தன.
அறிவாலயம் வந்த சிபிஐ அதிகாரிகள்
அதன் படி, கனிமொழி விசாரிக்கப் பட மாட்டார் என்பது உறுதி செய்யப் படவில்லை என்றாலும், கருணாநிதிக்கு நெருக்கடி தராத வண்ணம், பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி தெரியாத வகையில் சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற உறுதி மொழி, கருணாநிதியிடம் காங்கிரஸ் தலைமையால் வழங்கப் பட்டதாக தெரிகிறது. அதன்படி, காலை சிபிஐ அதிகாரிகள், கலைஞர் டிவி அலுவலகத்துக்கு காலை 10.30 மணி க்கு ருவது என்றும், அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலம் என்ற நூலகத்தில், தயாளு, கனிமொழி, அமிர்தம் மற்றும் கலைஞர் டிவி மேலாண் இயக்குநர் சரத்குமார் ஆகியோர் விசாரிக்கப் படுவார்கள் என்றும் திட்டமிடப் பட்டது.
இந்தப் புன்னகை என்ன விலை.. ? (ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிங்கண்ணா)
கலைஞர் டிவியின் பின்புறம் உள்ள நுழைவாயில் வழியே வந்தால், பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாது என்றும், நேர்காணல் காரணமாக அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்கள் அதிகம் காணப்படுவதாலும், பத்திரிக்கையாளர்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதாலும், ஊர் உலகத்துக்கு தெரியாமல் இந்த சோதனையை நடத்தி முடித்து விடலாம் என்ற திட்டமிட்டிருந்தார்கள்.நம்பகிட்ட நடக்குமா ? காலை சரியாக 6.40க்கு அனைத்து பத்திரிக்கையாள நண்பர்களுக்கும் இந்தத் தகவல், குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப் பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் பெருமளவில், தொலைக்காட்சி கேமராக்களோடு குவிந்தனர். கனிமொழி, தயாளு, அமிர்தம் ஆகியோர், வந்திறங்கியது முதல், சிபிஐ அதிகாரிகள் கிளம்பியது வரை, முழுமையாக இச்செய்தியை கவர் செய்தனர்.
எது எப்படியோ.... நல்லபடியாக இந்த விசாரணை முடிந்தது. அடுத்தரவுண்டு எப்போது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
THANKS : SAVUKKU
&
SIRKALI SITTHAPPU
No comments:
Post a Comment