Wednesday, March 9, 2011

அட மானம் கெட்ட ம ம (க) தமீம் அனசாரியே விடுதலை புலிகளை மன்னிப்பதற்கு நீ யார்?

 கடந்த ஜனவரி 16 அன்று திருச்சியில் நடைபெற்ற “அயோத்தி தீர்ப்பும் தேசிய அவமானமும்” என்ற கருத்தரங்கில் தேர்தலை மனதில் வைத்து பேசிய நாம்தமிழர் இயக்கத்தலைவர் சீமானும், மமக துணைப் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரியும் தங்களின் எல்லையை மீறி பேசியதாகவே நமக்கு படுகின்றது. முதலில் அங்கு பேசிய பேச்சுக்களை த.மு.மு.க இணையத்தில் வந்ததை பார்ப்போம்.
ஜனவரி 16 அன்று திருச்சியில் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அயோத்தி தீர்ப்பும் தேசிய அவமானமும் என்ற கருத்தரங்கில் சீமானும் அழைக்கப் பட்டிருந்தார். அதில் பேசிய சீமான், “கடந்த காலத்தில் புலிகள், முஸ்லிம்கள் இருதரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. புலிகள் சார்பில் நடைபெற்ற தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மறந்துவிடுங்கள். அதை மன்னித்து விடுங்கள். புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கையுடையவர்களாக இருந்திருந்தால் நானும், அண்ணன் கொளத்தூர் மணியும் புலிகளை ஆதரித்திருக்கவே மாட்டோம் என்று பகிரங்கமாகப் பேசியதும், அரங்கமே அதை வரவேற்று ஆதரித்தது.

அடுத்துப் பேசிய ம ம (க)  துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, சீமானின் பேச்சை சுட்டிக்காட்டி மன்னிக்கும் மனப்பான்மை முஸ்லிம்களின் குணம் என்றும்,

ஒருவர் மீது உங்களுக்கு இருக்கும் கோபம், அவர்களின் நியாயங்களை நிராகரிப்பதாக இருக்கக்கூடாது என்ற குர் ஆன் வசனத்தை (5:8) சூரத்துல்மாயிதா)
சுட்டிக்காட்டி இன்று ஈழத்தில் அம்மக்களின் துன்பத்தை எண்ணிப்பார்த்து அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை என்றார். மேலும், சீமான் அவர்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டபிறகு, நடந்துவிட்ட பழைய துயரங்களை இரு தரப்புமே பெருந்தன்மையாக மறந்துவிட்டு, அடுத்தக் கட்டத்தை நோக்கி ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் பேசினார்.

இருவரின் பேச்சும் அரங்கத்தில் கூடியிருந்த அனைவரையும் சிந்திக்க வைத்தது. இது குறித்து ஆரோக்கியமான மனமாற்றம் எழும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பாலஸ்தீனத்தில் அநீதி  நடக்கும் போதும், காஷ்மீரில் அநீதி நடக்கும் போதும், குஜராத்தில் அநீதி நடக்கும் போதும் நம்மோடு இணைந்து போராடும் நமது தோழர்களுக்கு, அவர்கள் முன்னெடுக்கும் நியாயமான பிரச்சனைகளில் குரல் கொடுப்பது நமது கடமையாகும்.

என்று கூறியுள்ளனர். கூட்டம் நடந்தது இறை இல்லத்தின் வழக்கு தொடர்பானது. அது தொடர்பாக மட்டும் பேசிவிட்டு செல்லுங்கள். இந்தியாவில் இறைஇல்லத்தினை இடித்தார்கள். ஆனால் இலங்கையிலோ, இறைவனின் இல்லத்தில், புனிதமான மாதமான ரமலானில் வணங்கிகொண்டு இருந்த முஸ்லிம்களை, கொன்ற விடுதலைப்புலிகளை மன்னிக்கும்படி கூறி வக்காலத்து வாங்கி இருக்கும் தமீம் அன்சாரியின் செயல் கண்டிக்கதக்கது. அதற்கு ஆதாரமாக குரானின் வசனத்தையும், பாலஸ்தீனத்தில், காஷ்மீரில் குஜராத்தில் நடந்தவைகளுடன் ஒப்பிட்டு இவர் சாதகமாக பயன்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. 

மேலும் இலங்கையில் முஸ்லிம்களும் தவறு செய்தனர் என்று கூறி இருப்பதால், தமீம் அந்த தவறுகளை பட்டியலிடமுடியுமா?. நாம் இலங்கையில் தமிழர்கள் படும் துயரத்திற்கு ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும். அதற்காக விடுதலைபுலிகளை மன்னிக்கமுடியுமா?. முடியும் என்றால், அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் இலங்கையில் தங்களின் உறவினர்களை பலிகொடுத்த இலங்கை முஸ்லிம்கள் ஆவார்கள்.

புலிகளை மன்னிக்க இந்த தமீமுன் அன்சாரி யார்?. இவரின் உறவினரை இலங்கையில் இவர் பறிகொடுத்தாரா?. இல்லை சீமான் விடுதலைபுலியா?. அப்படி என்றால் கோயமுத்தூரில் 19 முஸ்லிம்களை அநியாயமாக பறிகொடுத்தோமே, அதையும் மன்னிக்கலாமா?. குஜராத்தில் கோடிகணக்கில் சொத்துகளையும், ஆயிரக்கணக்கில் உயிர்களையும், வயிற்றில் இருந்த கருவையும் கீறி கிழித்து கொன்றார்களே! அதை மன்னிக்கலாமா?. பாபர் மசூதியை பறிகொடுத்தோமே அதையும் மன்னிக்கலாமா?. பள்ளி இடிப்பையும் மன்னிக்கலாம் என்றால் எதற்கு திருச்சியில் கூட்டம் போட்டீர்கள்?. 

 அரசியலுக்காக சீமானை ஆதரியுங்கள். ஆனால் ஓட்டுக்காக அவரின் விடுதலைபுலிகளின் ஆதரவு நிலைபாட்டை ஆதரிக்காதீர்கள். மன்னிப்பை விடுதலைப்புலிகள் கேட்கட்டும். அதை இலங்கை முஸ்லிம்கள் ஆமோதிக்கட்டும். பின் நாம் இதில் தலையிடலாம்.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமானும் மன்னிக்க சொல்லியுள்ளார். இவர் முதலில் கோலை முத்துகுமார் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்ட இந்திய அரசின் செயல்பாட்டை மன்னிப்பாரா?. இலங்கை ராஜபக்சேவை மன்னிப்பாரா?. கருணாநிதியை மன்னிப்பாரா?. மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட நீங்கள் பின் ஏன் நாம் தமிழர் இயக்கம் கண்டீர்கள்?. முதலில் இவர்களை நீங்கள் மன்னியுங்கள். பின் நாங்கள் முடிவு செய்கின்றோம் புலிகளை மன்னிப்பதா வேண்டாமா என்று!.
சகோதரர் தமீம் அவர்களே!, முதலில் நீங்கள் இலங்கை சென்றுவாருங்கள். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பள்ளி வாசலில் இன்னும் இரத்தக்கரையும், சுவற்றில் துப்பாக்கியால் துளைத் தெடுக்கப்பட்ட துவாரங்களும் இன்னும் சபித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

அங்கு ஷஹீதான முஸ்லிம்கள் அடக்கப்பட்ட கபுருஸ்தானுக்கு சென்று வாருங்கள். பின் இந்த வார்த்தை உங்களின் உதட்டிலிருந்து வந்ததா?. இல்லை உள்ளத்தில் இருந்து வந்ததா என்று நீங்களே முடிவு செய்வீர்கள்!.

நன்றி : http://www.adiraimujeeb.blogspot.com/




No comments:

Post a Comment