Tuesday, March 8, 2011

திமுக - காங். இடையே தொகுதி உடன்பாடு: காங்கிரசுக்கு 63 தொகுதிகள்: குலாம் நபி ஆசாத் டெல்லியில் பேட்டி

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
தமிழக சட்டபேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதிமாறன் ஆலோசனை நடத்தினர். அப்போது மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆலோசனைக்குப் பின்னர் பேசிய குலாம் நபி ஆசாத், திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த அணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.

நன்றி : நக்கீரன்

No comments:

Post a Comment